HOME
ABOUT
INDIAN SEEDS
MESSAGES
ARTICLES
AUTOBIOGRAPHY
NEWS
PUBLICATIONS
CONTACT
பாடலின் பாதை
அனுபவங்கள்
கேள்வி-பதில்
சிறுகதைகள்
கவிதைகள்
உதிர்ந்த பழம்
கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். பரந்து விரிந்த பாரதமாகிய நமது இந்திய தேசத்தில் ஒவ்வொரு நாளும் இயேசுவை தங்களது வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஆத்துமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை நினைத்து ஆனந்தமடைகின்றோம். இத்தருணத்தில், புதிதாக கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, மறுபிறப்படைந்து, ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தை அன்பளிப்பாக அளிக்கத் திட்டமிட்டு, இப்பணியினை நிறைவேற்ற தொடர்ந்து செயல்பட்டுவருகின்றோம். இந்திய தேசத்தில் ஆத்தும அறுவடையில் ஈடுபட்டுவரும் அனைத்து ஊழியங்களின் பணித்தளங்களிலுள்ள ஆத்துமாக்களையும் கருத்தில் கொண்டவர்களாக, துளியாகத் தொடங்கப்பட்ட இப்பணியினை தேவ தயவினால் இம்மட்டும் கருத்தாக நிறைவேற்ற கர்த்தர் துணைசெய்துவருகின்றார். இவ்வூழியத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், உங்களது பங்களிப்பை வேதாகமங்களாகவோ அல்லது காணிக்கையாகவோ எங்களுக்கு அனுப்பி இப்பணியினைத் தாங்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
சிநேகிதன்